ETV Bharat / entertainment

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

author img

By

Published : Dec 5, 2022, 6:54 PM IST

துணிவு படத்தின் முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ பாடல் வரும் டிச.9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் அப்டேட்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் ’துணிவு’ படத்தின் சில்லா சில்லா பாடல் வரும் டிச.9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில் வைசாக் வரிகளில் அனிருத் பாடியுள்ளதாக அறிவிப்பு வந்ததில் இருந்தே, இந்தப் பாடல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கிவிட்டது.

துணிவு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படம் குறித்த அப்டேட் வராமல் ரசிகர்கள் தவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று துணிவு படத்தின் புகைப்படங்கள், இன்று பாடல் அப்டேட் என அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஞ்சு வாரியரும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'துணிவு' அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.