சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
துணிவு: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
![துணிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ott-theatre-script-7205221_13012023132231_1301f_1673596351_362.jpg)
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். குடும்பப் பின்னணியில் கதை உருவாகியுள்ளது.
![வாரிசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ott-theatre-script-7205221_13012023132231_1301f_1673596351_287.jpg)
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உள்ளது. வாரிசு திரைப்படமும் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வீர சிம்ஹா ரெட்டி: இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் வீர சிம்ஹா ரெட்டி.
தெலுங்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த இப்படம் நேற்று(ஜன.12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வால்டர் வீரைய்யா: கே.எஸ்.ரவீந்தரன் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் வால்டர் வீரைய்யா. இப்படத்தில் ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கல்யாணம் கமணீயம்: சந்தோஷ் ஷோபன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் 'கல்யாணம் கமணீயம்'. இப்படத்தை அனில் குமார் இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லத்தி: வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், லத்தி. கடந்த மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இந்நிலையில் நாளை இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ்: மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்".
![உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-ott-theatre-script-7205221_13012023132231_1301f_1673596351_630.jpg)
இப்படத்தை அபினவ் சுந்தர் இயக்கி இருந்தார். இப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர்கள் அஜித், விஜய் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!