பெரம்பலூர்: உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் பாலக்கரை பகுதியில் பேனர் வைத்துள்ளார்.
இச்சம்பவம் சக காவலர்கள், மற்றும் பொது மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி வைக்கப்பட்ட பேனர், மே 20-ம் தேதி அகற்றப்பட்டது. இதனையடுத்து, காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆயுத படை காவலர் கதிரவன், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய பணிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் என்பதும், அந்த வழக்கு நிலுவை விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான்..!’ : ’உதய்ணா’விற்காக விதவித போஸ்டர் ஒட்டிய உடன்பிறப்புகள்!