ETV Bharat / entertainment

தளபதி 67: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

author img

By

Published : Jan 30, 2023, 9:01 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்யின் தோற்றம் எப்படி இருக்கும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தளபதி 67 படத்தை தயாரித்து வரும் ‘செவன் க்ரீன் ஸ்டூடியோ’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தளபதி 67 அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தளபதி 67 அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும், ரத்ன குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் மற்றும் தீராஜ் வைடி ஆகியோர் வசன கர்த்தா என்றும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். மேலும் தளபதி 67 திரைப்படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இளைய தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷன் - நடிகர் சந்தீப் கிஷன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.