சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169ஆவது திரைப்படத்தை நெல்சன் தீலிப் குமார் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ”ஜெயிலர்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஜெயிலர்” என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ரத்ததுடன் கூடிய கத்தி தொங்குவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், என அடுத்தடுத்து வெற்றி படங்களுக்கு பிறகு நெல்சன் இயக்கிய ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்தது. இதனால் தலைவர் 169 படத்தின் திரைக்கதையை நெல்சன் உடன் இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரும் இணைந்து மெருகேற்றி வருகிறார்.
மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திரையுலக பிரபலங்கள் பாராட்டில் 'சுழல் தி வோர்டெக்ஸ் '