ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு சில மாதங்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க மகேஷ்பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகாவும், மகேஷ்பாபுவும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். 'SSMB29' என்றழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு இன்று, உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'Arm day' என்று குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு புகைப்படத்தில் தனது ஜிம்மில் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்து, ஆர்ம்ஸ் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் தனது பிசிக்கல் தெரப்பிஸ்ட் மினாஷ் கேப்ரியல் உடன் காணப்படுகிறார்.
மகேஷ்பாபுவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரது ரசிகர்கள் பலரும் அவரது உடலமைப்பை பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர். 47 வயதான மகேஷ்பாபு, ஒரு இளைஞரைப் போல உடலை பராமரித்து வருவதாகவும் பாராட்டுகின்றனர். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: #26YearsOfYuvanism: 'அளவற்ற அன்பிற்கு நன்றி' - யுவன் நெகிழ்ச்சி