ETV Bharat / entertainment

Pushpa-2 Release : புஷ்பா-2 ரிலீஸ் எப்போது? லீக்கான ருசிகர தகவல்! - புஷ்பா 2 ரிலீஸ்

புஷ்பா - 2 திரைப்படம் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun
Allu Arjun
author img

By

Published : May 24, 2023, 10:47 PM IST

ஐதராபாத் : தெலங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் தயாராகி வரும் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இடம் பெற்ற ஊ சொல்லிறியா மாமா உள்ளிட்ட பாடல்கள் கடும் விமர்சனங்களை எதிர் கொண்டாலும் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா படத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் பாலிவுட் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், அவர் நடித்த மற்ற படங்களையும் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல் புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் மிரட்டி இருந்தார் என்றே கூறலாம்.

இந்த நிலையில், புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், எப்போது இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், கெமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த செய்தி உண்மையாக இருந்தால் புஷ்பா 2 படத்திற்கான எதிர்பார்ப்பு பாலிவுட் அளவிலும் இரு மடங்காக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம், புஷ்பா இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பையும் படக்குழு கசியவிட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு புஷ்பா இரண்டாம் பாகம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளாது. அதாவது, 2024 ஆம் ஆண்டு மே அல்லது ஜூலை மாதத்திற்குள் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக The Immortal Ashwatthama உள்ளிட்ட படங்களில் நடிப்பது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : உலகம் முழுவதுமே 6 கதைதான் இருக்கு - கதை காப்பி குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மிஷ்கின் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.