ETV Bharat / entertainment

சோழ தேசத்தில் ’பொன்னியின் செல்வன்’ டீசர்.. விழாக்கோலம் பூணும் தஞ்சை! - teaser release in tanjore

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தஞ்சையில் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோழ தேசத்தில் நடக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழா!!

author img

By

Published : Jun 8, 2022, 10:34 AM IST

Updated : Jun 8, 2022, 10:57 AM IST

இயக்குனர் மணிரத்னம் டைரக்ஷனில் வெளியாகவிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத் குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். ’பொன்னியின் செல்வன்’ என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன். ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் இந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தஞ்சையில் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'விக்ரம்' திரைப்படத்தால் மீண்டும் வைரலாகும் 'சக்கு... சக்கு... வத்திக்குச்சி....' பாடல்!

Last Updated : Jun 8, 2022, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.