ETV Bharat / entertainment

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - ரஜினிகாந்த் வாக்கு செலுத்தினார்! - தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், சசிகுமார், பிரகாஷ் ராஜ், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

Tamil
தமிழ்
author img

By

Published : Apr 30, 2023, 1:48 PM IST

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக தேனாண்டாள் முரளி இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் 30ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இரண்டு அணிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும் களமிறங்கியுள்ளது. முரளி அணியில், முரளி தலைவராகவும், துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி போட்டியிடுகின்றனர். செயலாளர்கள் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சௌந்தரபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மன்னன் தலைமையிலான அணியில், தலைவராக மன்னனும், துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூவும் போட்டியிடுகின்றனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியில் பொருளாளர் பதவிக்கு ரவீந்தர், இணை செயலாளர் பதவிக்கு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று(ஏப்.30) நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, லைகா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன், நடிகர்கள் சசிகுமார், பிரகாஷ் ராஜ், மன்சூர் அலிகான், பா.விஜய், தேவயானி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து ஏராளமான திரைப்பட தயாரிப்பாளர்கள் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இதையும் படிங்க: Pichaikkaran 2: பல தடைகளை தாண்டி வெளியானது 'பிச்சைக்காரன் 2' ட்ரைலர்!

இதையும் படிங்க: "திறமையான பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்" - நடிகை சம்யுக்தா

இதையும் படிங்க: தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஷூட்டிங்கிற்கு தென்காசி ஆட்சியர் அனுமதி.. ஆனா ஒரு கண்டிஷன்!

இதையும் படிங்க: அஜித், விஜய் மீம்களோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள 'அடியே' மோஷன் போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.