நடிகர் ரஜினியை வைத்து ’அண்ணாத்த’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இப்படம் சூர்யாவின் 42வது படமாகும்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு இவர் இசை அமைக்கிறார்.
சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1,2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்நிலையில், இப்படத்தில் சூர்யா ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே சூர்யாவுடன் ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...