ETV Bharat / entertainment

SK தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி... - சூரி அடுத்த பட அறிவிப்பு

சிறந்த காமெடியனாக வலம் வந்த நடிகர் சூரி கதாநாயகனாக விடுதலை என்ற படத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார்.

kottukkaali
கொட்டுக்காளி
author img

By

Published : Mar 10, 2023, 2:53 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து பின்னர், தற்போது மிகப் பெரிய நகைச்சுவை நடிகராக மாறியவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவரது பரோட்டா காமெடி அதிகளவில் மக்களால் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைவரின் படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி காமெடி வேடங்களில் நடித்து கொண்டு இருந்த சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் கதை நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "விடுதலை" என்ற படத்தில் தற்போது கதை நாயகனாக சூரி நடித்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கதை நாயகனாக நடிக்கும் முதல் படமே வெற்றிமாறன் இயக்கம், இளையராஜா இசை என பெருமைமிகு தருணமாக சூரிக்கு மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வாத்தியார் என்ற முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது மற்றொரு படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கவுள்ளார். "கூழாங்கல்" என்ற படத்தை இயக்கிய வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இப்படத்தை பார்த்து வியந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது தயாரிப்பு நிறுவனத்தில் இப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் தற்போது சூரியை கதைநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு "கொட்டுக்காளி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் "எனது தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை மிகவும் திறமை வாய்ந்தவரும், விருது பெற்ற இயக்குனருமான வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் எனது அன்பு அண்ணன் சூரி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அன்னா பென் என்பவர் நாயகியாக நடிக்கிறார். இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைத்துறையினருக்கும் ஆச்சரிய அறிவிப்பாக உள்ளது.

இதையும் படிங்க: புதிய க்ரைம் படத்தில் இணைந்த கன்னங்குழி அழகி.. லைலா ரிட்டர்ன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.