ETV Bharat / entertainment

சின்ன படங்களில் இருந்துதான் சூப்பர்‌ ஸ்டார்கள் பிறக்கிறார்கள் - தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி - அர்ச்சனா கல்பாத்தி

அண்மையில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘லவ் டுடே’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று(டிச.10) சென்னையில் நடந்தது.

சின்ன படங்களில் இருந்துதான் சூப்பர்‌ஸ்டார்கள் பிறக்கிறார்கள் - தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

author img

By

Published : Dec 10, 2022, 6:25 PM IST

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று(நவ.12) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சி.இ.ஓ ரங்கநாதன், இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “சின்னப் படங்கள் திரைத்துறைக்கு ரொம்ப முக்கியம். சின்ன படங்களில் இருந்துதான் சூப்பர் ஸ்டார்கள்‌ பிறக்கிறார்கள். நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் எப்போதும்‌ துணையாக இருக்கிறார்கள் அதற்கு நன்றி. இப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா மிகப் பிரம்மாண்டமான நடத்த உள்ளோம்” எனப் பேசினார்.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “ஒரு புதுமுகம் நடிக்கும் இப்படத்திற்கு மிகப் பெரிய ஓப்பனிங் கொண்டு வரமுடியும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தேன். அதற்கு என்மீது உள்ள நம்பிக்கையும் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையும் தான் காரணம். ட்ரெய்லர் வந்ததும் இப்படம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள். அப்போது இருந்து இப்படம் பெரிய படமாக மாறிவிட்டது. இது இந்த வருடத்தின் டாப் 10 வெற்றி படங்களுக்குள் வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

இதையும் படிங்க: காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்.. பிரமாண்டமாக ரீ-ரிலீஸ் ஆன பாபா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.