ETV Bharat / entertainment

சூப்பர் 10 கிரிக்கெட்: முதல் பதிப்பை தொடங்கி வைத்த கெய்ல், கிச்சா சுதீப் - கிரிஸ் கெயில்

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு தொடங்கியது.

சூப்பர் 10 கிரிக்கெட்: கெய்ல், கிச்சா சுதீப் தொடங்கி வைத்தனர்!

author img

By

Published : Oct 16, 2022, 7:09 AM IST

சென்னை: இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும்வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்தப் போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் டிசம்பர் 2022இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.

இந்த லீக் போட்டிகளில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாட உள்ளனர். இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்” என்றார்.

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், “சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்” என்றார்.

இதையும் படிங்க: நயன்- விக்கி மீது போலீசில் புகார்..! தவறான முன்னுதாரணம் என குற்றச்சாட்டு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.