ETV Bharat / entertainment

Sivakarthikeyan family: குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்! - Sivakarthikeyan son photo

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, முதன் முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

author img

By

Published : Jul 12, 2023, 2:16 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று பிரபல நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 14) அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அவரது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியருக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது தந்தையின் நினைவாக சிவகார்த்திகேயன் அவரது மகனுக்கு, தந்தையின் பெயரை இணைத்து ‘குகன் தாஸ்’ என்று பெயர் வைத்து இருந்தார்.

குழந்தை பிறந்தது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார், என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம்” என பதிவிட்டு அவரது தந்தையின் புகைப்படம் முன்னிலையில் இவரது கை விரலை மகன் பற்றி இருப்பது போன்ற புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க: Vijay: 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!

பின்னர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவின் போதும், குழந்தையை இவர் கையில் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திலும் குழந்தையின் முகத்தை காட்டவில்லை.

மேலும், குழந்தையின் பெயர் குறித்து அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. உங்கள் அன்போடும் ஆசியோடும் ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டியிருக்கிறோம் என புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திலும் குழந்தையின் முகம் தெரியாதபடி தலை மட்டுமே தெரிந்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகனின் முகத்தை சமூக வலைதள உலகத்திற்கு காட்டாமல் வைத்திருந்த சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் அன்னையின் தவப்புதல்வன் நா.முத்துக்குமார் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.