தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்ப்வர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படத்தை இயக்கிய ’மடோன் அஸ்வின்’ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு வேண்டிய தேதிகளை ஏற்கனவே சிவகார்த்திகேயன் கொடுத்துவிட்டார். ஆனால், இப்போது அந்தப் படத்தின் கதையில் சற்று மாற்றம் வேண்டும் என கேட்டுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் குறைவாகவுள்ளதாகவும் எத்தனை மாதங்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை எழுதிக்கொண்டு வாருங்கள் என இயக்குநரை அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி படத்தின் வசூல் தான் எனக்கு முக்கியம் என கதையை நன்றாக மெருகேற்ற சொல்லியிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?