ETV Bharat / entertainment

Jawan audio launch: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய ஷாருக்கான்! - சென்னையில் ஷாருக்கான்

shahrukh khan: சென்னையில் தனியார் கல்லூரி அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்த இசை வெளியிட்டு விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலகலப்பாக பேசினார்.

Jawan audio launch
ஜவான் இசை வெளியீட்டு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 11:05 PM IST

சென்னை: ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் செம்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ஜவான். இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் தனியார் கல்லூரி அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் ஜவான் திரைப்படத்தில் நடித்த அனுபவம் மற்றும் நடிகர் ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஷாருக்கான் இணைந்து நடனமாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசும் போது, தனது படத்துக்காக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே இல்லை என்றும், விழாவை நடத்த அனுமதி தந்த கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது ஆரம்பகாலத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக இயக்குநர் மணிரத்னம் மற்றும் சந்தோஷ் சிவன், கமல்ஹாசனின் ஹேராம் ஆகிய படங்களில் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். 'ரா-ஒன்' படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்ததையும் கூறினார். மேலும் தமிழ் சினிமாவில் இருந்து தான் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை பார்த்து, "நீங்கள் என்னை பழிவாங்கலாம், ஆனால் என் பெண் ரசிகர்களை வாங்க முடியாது" என முன்னதாக விஜய் சேதுபதி பேசியதற்கு நகைச்சுவையாகப் பதில் கூறினார். இயக்குநர் அட்லீயை பார்த்து "மரண மாஸ் அட்லீ" என்று தமிழில் சொன்னார்.

மேலும் படக்குழுவினர் ஒருவருக்கும், அவரவர்கள் பெயர் சொல்லி அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, கலகலப்பான யோகி பாபு, அட்டகாசமான விஜய் சேதுபதி, விறுவிறுப்பான ரூபன், வித்தைக்காரன் அனிருத், வசீகரமான நயன்தாரா என அனைவரையும் அன்போடு அழைத்தார்.

நடன இயக்குநர் ஷோபியிடம் தான் ரஜினி மற்றும் விஜய் மாதிரி எல்லாம் நடனம் ஆடமாட்டேன் என்று கூறியதாகவும், தமிழக உணவு ரொம்ப சூப்பராகவும், சுவையாகவும், காரமாகவும் இருப்பதாகவும் கூறி, விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jawan audio launch: அட்லீ சொன்ன குட்டி கதை..என்னனு தெரியுமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.