நடிகர் கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி, பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர். இரும்புத்திரை, ஹீரோ போன்ற வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன்.
சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன் என்று பொருள். 'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை.
நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது. கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது.
இதையும் படிங்க: கோமாளி பட இயக்குனரின் “லவ் டுடே” பட ட்ரெய்லர் வெளியானது...