ஐதராபாத் : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் இருவரும் பரஸ்பரம் பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தேறி வந்த நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி படு வைரல் ஆனார். பட்டி தொட்டி எங்கும் பாடல் பரவிய நிலையில், சமந்தாவின் ரசிகர்களின் பட்டாளத்தின் எண்ணிக்கை உயர்ந்தது.
இதனிடையே அவர், சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களிலும், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் வெஸ் சீரிஸிலும் நடித்து வந்தார். இதில் சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதையடுத்து ஒரு வருடத்திற்கு புதிதாக எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
தொடர்ந்து உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை பெறப் போவதாகவும் அதன் காரணமாக ஒரு வருடத்திற்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என விளக்கம் அளித்ததும் அவரது ரசிகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர். சினிமாவுக்கு ஒராண்டு முழுக்கு போட்டு இருந்தாலும், சமூக வலைதளங்களில் சமந்தா படு ஆக்டிவாக இருந்தார்.
செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தன்னை உயிர்பித்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில், அடி மேல் அடுத்த அடியாக புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளதாக சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு Tra-la-la Moving Pictures என பெயர் வைத்து உள்ள சம்ந்தா, நிறுவனத்தின் இலச்சினையை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
மேலும், டிரா-லா-லா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் நவீன கால வெளிப்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை பிரதிபலிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை கொண்ட கதைகளை தயாரிக்க உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்து உள்ளார். நடிகை சமந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சீரியல் நடிகையை கரம் பிடித்தார் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி!