மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு பதிலாக அவர் தொகுத்து வந்த பிக் பாஸ்-16-ஐ தற்காலிகமாக இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவுள்ளார். சல்மான் கான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை 2010ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தீபாவளி முடிந்ததும் குணமாகி மீண்டு வருவார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்த நிலையில், அவர் ஓய்வெடுக்கும் நாள்களில் மட்டும் அவருக்கு பதிலாக இயக்குநர் கரண் ஜோஹர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இவர் ஏற்கனவே இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியான ‘ஜலக் திக்லா ஜா’ எனும் நிகழ்ச்சியின் தேர்வர்கள் குழுவில் பங்குபெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் சல்மான் கானின் வரவிருக்கும் திரைப்படங்களான ‘கிசி க பாய் கிசி கி ஜான்’, ‘டைகர் - 3’ ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ்