ETV Bharat / entertainment

விஜயகாந்த் மறைவு; இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சரத்குமார் இரங்கல்! - சரத்குமார்

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Vijayakanth
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சரத்குமார் இரங்கல்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 6:32 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ‘எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத்தழுவி, கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ, நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில், கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை.

அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' எனகூறியுள்ளார்.

அதேபோல், நடிகர் சரத்குமார் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னைப் பொருத்தவரை இன்று (டிச.28) துக்கமான நாள். மருத்துவமனைக்கு போகும் போதெல்லாம், விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பி பழைய விஜயகாந்தாக வருவார் என எண்ணிய அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு போகும்போது கேப்டன் நன்றாக வர வேண்டும் என இறைவனை வேண்டுவதில் நானும் ஒருவன்.

என்னுடைய கலையுலக பயணத்தில் நான் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தபோது எனக்கு பக்கபலமாக இருப்பவர், விஜயகாந்த். இரண்டு ஆண்டுகளாக சந்திக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. இந்த நாளில் நான் சென்னையில் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

விஜயகாந்த் எனக்கு தொடர்ந்து நிறைய படங்கள் வாய்ப்பு கொடுத்தார். நான் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் விஜய்காந்த் அவருடன் பேனரில் தாய்மொழி என்கின்ற படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி கெளரவ வேடத்தில் நடித்தார். நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது அவருடைய ஆளுமை மதிக்கத்தக்கது.

இன்று அவரை இழந்து தவிக்கின்ற தேமுதிக தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் என் சார்பாகவும், கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“விஜயகாந்த் சார் நீங்கள் என்றும் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் மறையவில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்”.

இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ கோட்டை முற்றுகை போராட்டம்..! 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.