ETV Bharat / entertainment

லால் சலாம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்! - vishnu vishal

Laal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

லால் சலாம்
லால் சலாம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 7:51 PM IST

Updated : Oct 12, 2023, 10:24 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த '3' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒய் திஸ் கொலவெறி' (Why This Kolaveri) என்ற பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார்.

தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘விஷ்ணு விஷால்’, ‘விக்ராந்த்’ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது இந்தியில் வெளியான ‘கை போ சே’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். லால் சலாம் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தமிழில் நிறையப் படங்கள் வந்திருந்தாலும் இரண்டு நண்பர்களுக்கு இடையேயான உறவைப் பற்றிய படமாக லால் சலாம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "47 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை வந்துள்ளேன்" - பழைய நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்; வைரலாகும் வீடியோ!

Last Updated : Oct 12, 2023, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.