ETV Bharat / entertainment

Rashmika Mandanna: இப்போ அவர் என் கூட இல்ல.. நாங்க பிரிஞ்சிட்டோம்; ராஷ்மிகா மந்தானா ஓபன் டாக்! - நடிகை

தனக்கும், தனது மேனேஜருக்கும் இருந்த தொழில்முறையிலான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.

Rashmika Mandanna opens up on feud with manager, this is what she has to say
Rashmika Mandanna: இப்போ அவர் என்கூட இல்ல... நாங்க பிரிஞ்சிட்டோம்! நடிகை ராஷ்மிகா மந்தானா ஓபன் டாக்
author img

By

Published : Jun 23, 2023, 4:17 PM IST

Updated : Jun 23, 2023, 4:29 PM IST

ஹைதராபாத்: ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைககளில் மிக முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றார்.

கீதா கோவிந்தம் படத்தினை தொடர்ந்து தெலுங்கில் இதே ஆண்டில் செல்லோ, தேவதாஸ் ஆகிய படங்களிலும் நடித்தவருக்கு இந்த மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு நாயகியாகவும் மாறினார்.

பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர துவங்கினார் ராஷ்மிகா மந்தானா. இவர் தற்போது பான் இந்தியா நடிகை ஆக உயர்ந்து உள்ளார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக இந்தியில் நடிகை ராஷ்மிகா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.பாலிவுட் திரையுலகில் “குட்பை” படத்தின் மூலம், அறிமுகமான ராஷ்மிகா மந்தானா, அடுத்ததாக, “மிஷன் மஞ்சு” படத்தில் நடித்து இருந்தார். தற்போது, ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வரும் “அனிமல்” திரைப்படம், பாலிவுட்டில் அவருக்கு மூன்றாவது படம் ஆகும்.

இது தவிர தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகியாகவும், ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு அடுத்ததாக மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சமீபத்தில் மகேஷ் பாபு படத்தில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியதை அடுத்து, அப்படத்தில் அவருக்கு பதிலாக ராஷ்மிகாவை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா, சமீபத்தில் தனது மேனேஜரை வேலையை விட்டு நீக்கி இருந்தார். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பணியாற்றி வந்த அந்த மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்ததன் காரணமாக தான் ராஷ்மிகா அவரை வேலையை விட்டு தூக்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

எங்கள் பிரிவு சுமூகமானது: இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "தங்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த பிரிவு சுமூகமானது தான். நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்து உள்ளோம். எங்கள் பிரிவை பற்றி இணையத்தில் பரவும் செய்தியில் துளியும் உண்மையில்லை" எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷ்மிகா. மேனேஜர் உடனான பிரிவு குறித்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நேஷனல் க்ரஷ் 'ராஷ்மிகா மந்தனா' புகைப்படங்கள்

Last Updated : Jun 23, 2023, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.