ETV Bharat / entertainment

ஆஸ்கர் விருது வழங்கும் பிரபலங்கள் பட்டியலில் 'தீபிகா படுகோன்'; கணவர் ரன்வீர் கொடுத்த அந்த ரியாக்‌ஷன் - தீபிகா படுகோன்

அமெரிக்காவில் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், விருது வழங்கும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெயர் இடம்பெற்றுள்ளது. தீபிகா படுகோனுக்கு அவரது கணவர் ரன்வீர் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ranveer
ranveer
author img

By

Published : Mar 3, 2023, 6:25 PM IST

ஹைதராபாத்: திரைத்துரையில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் திரைத்துறையில் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படம், சிறந்த பாடல் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 12ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து மூன்று திரைப்படைப்புகள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தெலுங்கு இயக்குநர் ராஜமெளலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏற்கனவே கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவரது அசத்தலான நடனம் அனைவரையும் கவர்ந்தது. இப்பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். பாடகர்கள் ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடல் இப்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் லைவாக பாடப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் கிடைப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சிறந்த ஆவண குறும்படப் பிரிவில், இயக்குநர் கார்த்திகி இயக்கிய 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் யானைக் குட்டியைப் பராமரிக்கும் தம்பதியின் வாழ்வியலை அடிப்பையாகக் கொண்டது 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம். உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் பாராட்டுகளை வாங்கி குவித்தது.

அடுத்ததாக ஆஸ்கரின் சிறந்த ஆவணத் திரைப்படப் பிரிவில் ஷானக் சென் இயக்கிய 'ஆல் தட் பிரீத்ஸ்' என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பறவைகளைப் பராமரிக்கும் நதீம், சவுத் என்ற இரு சகோதரர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

தீபிகா படுகோன் இன்ஸ்டா போஸ்ட்
தீபிகா படுகோன் இன்ஸ்டா போஸ்ட்

இந்த நிலையில் ஆஸ்கர் விழாவில், விருது வழங்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக தீபிகா படுகோன் விளங்குகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ட்வெய்ன் ஜான்சன், மைக்கேல் ஜோர்டன், சாமுவேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் பெயருடன் தீபிகா படுகோனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில், விருது பெறும் வகையிலும், விருது வழங்கும் வகையிலும் இந்தியர்களுக்கு கெளரவம் கிடைத்துள்ளது.

ஆஸ்கர் விழாவில் விருது வழங்குபவர்களின் பட்டியலை நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவரது நண்பர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங், பிளெஸ்டு இமோஜியையும், கைதட்டும் இமோஜியையும் கமென்ட்டில் பதிவிட்டு தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அதேபோல், தீபிகா படுகோனின் சகோதரி அனிஷா படுகோனேவும் கமெண்ட் செய்துள்ளார். இது தீபிகா படுகோனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என அவரது ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 'Naatu Naatu' பாடல் லைவ் நிகழ்ச்சி - ஆர்ஆர்ஆர் படக்குழு உற்சாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.