ETV Bharat / entertainment

ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்: வழக்கறிஞர் புகார்! - ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், வழக்கறிஞர் ஆஷிஸ் ராய், மகாராஷ்டிர மாநிலப்பெண்கள் ஆணையத்தின் முன்பு புகார் அளித்துள்ளார்.

ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்: வழக்கறிஞர் புகார்

author img

By

Published : Jul 28, 2022, 8:47 PM IST

மும்பை: நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட் விவகாரம் நீண்ட வண்ணமே உள்ளது. நேற்று(ஜூலை 27) ரன்வீருக்கு எதிராக வழக்கு ஒன்று மகாராஷ்டிர மாநிலப்பெண்கள் ஆணையத்தின் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் வழக்கறிஞர் ஆஷிஸ் ராய், ரன்வீரின் இந்த நிர்வாணப் புகைப்படம், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை அவமதிக்கும் வண்ணம் உள்ளதாகவும், அது சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னரே, ரன்வீருக்கு எதிராக செம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரில், இது பெண்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணம் உள்ளதாகக் கூறி புகார் அளித்திருந்தார், ஓர் என்ஜிஓ அமைப்பாளர். இதனையடுத்து, மும்பை காவல்துறையினர் ரன்வீருக்கு எதிராகப் பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஓர் பிரபல நாளிதழுக்காக நிர்வாணமாக அளித்த போட்டோ சூட் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த போட்டோ சூட்டில் எடுத்த புகைப்படங்கள் கடந்த 21ஆம் தேதி இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், டிஸ்கவரி சேனல் புகழ் ‘பியர் கிரில்ஸ்’ உடன் ரன்வீர் பங்கேற்ற ‘ரன்வீர் VS வைல்டு’ நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ரன்வீர் நடிப்பில் இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவான ’சர்க்கஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கணவருக்கு நடிகை பிரனிதா பாத பூஜை: ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.