ETV Bharat / entertainment

லியோவில் ராம்சரண் அல்லது தனுஷ் சர்ப்ரைஸ் கேமியோ?.. மில்லியன் டாலர் கேள்வியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! - leo bookings

Is Leo included in LCU?: லியோ திரைப்படத்தில் ராம்சரண் அல்லது தனுஷ் சர்ப்ரைஸ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், லியோ LCUவில் இடம் பெறுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லியோ
லியோ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:35 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக முன்னேறினார். ஒரு இரவில் நடக்கும் கதை, பாடல்கள் இல்லை, வித்தியாசமான மேக்கிங் என கைதி திரைப்படம் கவனம் ஈர்த்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் திருப்தி படுத்தவில்லை. அப்போது பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், ”இது என்னுடைய 50 சதவீத படம் தான். அடுத்த முறை நான் விஜய்யுடன் இணையும் போது அது 100 சதவீதம் என்னுடைய படமாக இருக்கும்” என்றார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் முன்னதாக 1980களில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் யுனிவர்ஸ் என்ற புது முயற்சியை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டார். அதாவது இவருடைய மற்ற படங்களில் இருந்த கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் வரும். ஹாலிவுட்டில் உள்ள மார்வெல் படங்கள் போல், விக்ரம் படத்தில் அவர் இதற்கு முன் இயக்கிய கைதி படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் வந்தன. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இதனையடுத்து மீண்டும் விஜய் லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவானது. லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் ஹாலிவுட்டில் வெளியான ’ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் வெளியான லியோ படத்தின் டிரைலரும் அதையே உணர்த்தியது. தற்போது லியோ திரைப்படம் லோகேஷின் எல்சியுவில் (LCU) இடம் பெறுமா என ரசிகர்கள் கேள்வியுடன் காத்திருக்கின்றனர். லியோ படக்குழுவினர் இந்த கேள்வி குறித்து ஊடகங்களில் மௌனம் காத்து வருகின்றனர். ஆனால் லியோ திரைப்படம் எல்சியூ தான் என்று கூறப்படுகிறது. மேலும் விக்ரம் படத்தில் சர்ப்ரைஸாக சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெற்றது போல இந்த படத்தில் ராம் சரண் அல்லது தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

லியோ படத்தின் முதல் பகுதி ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படமும் இரண்டாம் பகுதி லோகேஷின் எல்சியூ படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கைதி மற்றும் விக்ரம் படத்தின் சில கதாபாத்திரங்கள் லியோ படத்தில் வரும் என்று கூறப்படுகிறது. கைதி படத்தில் வந்த நெப்போலியன் கேரக்டர் லியோவிலும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பிய மில்லியன் டாலர் கேள்விக்கு வரும் அக்டோபர் 19ஆம் தேதி விடை தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: ஐமேக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸாகும் லியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.