ஐதராபாத்: தமிழ் சினிமாவில் மொத்தம் நான்கே படங்கள், அதில் 3 வெற்றிப் படங்கள் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் இயக்குநர் நெல்சன். தற்போது நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றியைக் கண்டது.
மேலும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் யு/ஏ சான்றிதலுடன் வெளியான இப்படம் உலகம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரம் திரையரங்களிலும், தமிழ்நாட்டில் மட்டும் 1200 திரையரங்கில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல நிறுவனங்கள் டிக்கெட்டும் கொடுத்தும் விடுமுறையும் அளித்தது. ஆக்ஷன், ஸ்டைல், காமெடி என பல கலவையான வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளிலேயே எதிர்பாராத அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கல்லா கட்டியது எனலாம். முதல் நாள் வசூல் மட்டும் சுமார் 20 கோடியைத் தாண்டியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
-
From Muthu to Tiger Muthuvel Pandian, the transformation was 🔥😎#Jailer ruling theatres all around the world💥#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood… pic.twitter.com/YrtFqlvnrZ
— Sun Pictures (@sunpictures) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From Muthu to Tiger Muthuvel Pandian, the transformation was 🔥😎#Jailer ruling theatres all around the world💥#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood… pic.twitter.com/YrtFqlvnrZ
— Sun Pictures (@sunpictures) August 18, 2023From Muthu to Tiger Muthuvel Pandian, the transformation was 🔥😎#Jailer ruling theatres all around the world💥#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood… pic.twitter.com/YrtFqlvnrZ
— Sun Pictures (@sunpictures) August 18, 2023
அதைத் தொடர்ந்து, இதுவரை உலகம் முழுவது சுமார் 375 கோடியை கடந்து உள்ளதாகவும் படக்குழு தகவல் தெரிவித்து உள்ளது. தற்போது படம் வெளியாக ஒரு வாரம் ஆன நிலையில், கடந்த 2 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் சிறிது டல் அடித்தது எனக் கூறப்படுகிறது. சுதந்திர தினத்திற்கு பிறகு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் என்பதால் கலெக்ஷன் வரவில்லை எனவும், இனி வார இறுதி நாட்களின் மக்கள் அதிகளவில் படம் பார்க்க வருவார்கள் எனவும் படக்குழு தெரிவித்து உள்ளது.
தற்போது திரைப்படம் வெளியாகி 9 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை உலகளவில் வசூலானது ரூ.375.40 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் ஜெயிலர் வசூலானது ரூ.250 கோடியை நெருங்கி உள்ளது. இனி வரும் வாரங்களில் நிச்சயமாக 500 கோடியை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து படக்குழு நன்றி அறிவிப்பு விழாவில் கூட இயக்குநர் நெல்சன் 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எனது முதல் படமும் கடைசி படமும் மிகப்பெரிய வெற்றி" - உதயநிதி ஸ்டாலின்!