இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான படம் ’டான்’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
இப்படம் மே 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூலும் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை இன்று ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
படத்தைப் பார்த்த ரஜினி போன் செய்து சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். ’படம் சூப்பர், நல்ல நடிப்பு, கடைசி அரைமணி நேரம் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.