ETV Bharat / entertainment

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 படத்தின் பூஜை! - rajkumar periasamy

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் 'SK 21' படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Produced by Kamal Haasan and Sivakarthikeyan starrer movie crew has released SK 21 pooja video
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 படத்தின் பூஜை!
author img

By

Published : May 5, 2023, 1:24 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியவர். இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. ரஜினி, விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்கள் தான் மிகப் பெரிய அளவில் வியாபாரம் செய்யப்படுகின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்தவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் வெளியானது.‌ ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் அவ்வளவு தான் என பேச்சு அடிபட்டது. ஆனாலும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர்.

இத்தகைய உயரத்தை அடைந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகர்த்திகேயன் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜி.வி‌.பிரகாஷ்குமார் இசை அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். மேலும் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இதன் பூஜை வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரங்கூன் திரைப்படம் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நல்ல படமாகும். இதனால் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் கமல்ஹாசன் கதைத் தேர்வில் வித்தியாசம் காட்டக் கூடியவர். அவர் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் இப்படத்தின் கதை நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் படம் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதுமே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் பங்கேற்ற படத்தின் பூஜை வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 வெளியிட நீதிமன்றம் அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.