பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தற்போது ’மை டியர் பூதம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை மீசையை எடுக்காத பிரபுதேவா இந்த படத்திற்காக மீசை எடுத்தது குறித்து வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், சின்ன வயதிலிருந்து தாடி வைத்துள்ளேன். ஏன் தாடியை எடுக்க மாட்டிங்களா என பலர் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நானும் பல காரணங்களை கூறி கடந்து விடுவேன். ஆனால் மை டியர் பூதம் படத்தின் போது, படத்தின் இயக்குநர் மீசை, தாடியினை எடுக்க வேண்டும் என கூறினார்.
-
How I sacrificed my moustache 😰❤️❤️❤️😆 pic.twitter.com/Iy4c6yQGM2
— Prabhudheva (@PDdancing) July 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How I sacrificed my moustache 😰❤️❤️❤️😆 pic.twitter.com/Iy4c6yQGM2
— Prabhudheva (@PDdancing) July 5, 2022How I sacrificed my moustache 😰❤️❤️❤️😆 pic.twitter.com/Iy4c6yQGM2
— Prabhudheva (@PDdancing) July 5, 2022
ஏன் என கேட்டதற்கு 5 செகண்ட் தான் என கூறினார். 5 செகண்டுக்கு மீசை எடுக்கனுமா என கூறி, எடுக்க முடியாது என்றேன். ஆனால் என்னிடம் ஏதேதோ கூறி என்னை மீசை எடுக்க வைத்துவிட்டர் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ராக்கெட்ரி’ படம் பார்க்காமலேயே பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!