ETV Bharat / entertainment

Powerful people makes powerful films - உதயநிதி பற்றி சிலாகித்த சிவகார்த்திகேயன்! - சிவகார்த்திகேயன்

’சினிமாவில் டான் உதயநிதி தான், டானிற்கு நிறைய விளக்கம் உள்ளது. கேஜிஎஃப் படத்தின் பாணியில் சொல்லணும் என்றால் ”Power ful people makes power full films” என்று சொல்லலாம் என "நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
நெஞ்சுக்கு நீதி
author img

By

Published : May 10, 2022, 6:22 PM IST

Updated : May 10, 2022, 7:31 PM IST

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று(மே 9) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், அமைச்சர் அன்பில் மகேஷ், பாடலாசிரியர் யுகபாரதி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆர்ஜே.பாலாஜி, போனி கபூர், ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

’நெருப்புடா’ பாட்டின் மூலம் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்தவர், அருண்ராஜா காமராஜ் என்று பாடலாசிரியர் யுகபாரதி நகைச்சுவையாகப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஆர்ஜே பாலாஜி, ‘கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி திமுக பதவியேற்றது. அந்த நாள் ஒரு 28 வயது பையனுக்கு கரோனா காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக படுக்கை தேவைப்பட்டது. 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதவியால் அந்தப்பையனுக்கு படுக்கை கிடைத்தது.

ஆர்டிக்கள் 15 திரைப்படம் இந்திய சினிமாவிற்கு தேவையான படம். அதே போல தமிழ்நாட்டிற்கும் தேவையானது. ஜெய் பீம், பரியேறும் பெருமாள் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படங்கள் எல்லாம் வரும்போது இல்லாத சாதியைப் பற்றி திரும்ப பேசுகிறார்கள் என்று சொல்கின்றனர். இல்லாத சாதியைத் திரும்ப கொண்டு வந்து படம் எடுக்கின்றனர் என குற்றச்சாட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் 445 கிராமங்களில் தீண்டாமை உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு உள்ளது. கபாலி வந்த போது சில கல்லூரி மாணவர்களிடம் நான் கேட்டேன். அப்போது அந்த ஆள் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றனர். படம் எடுத்தது பா. இரஞ்சித் அதனால் தான். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு சாதி என்ற உணர்வு உள்ளது. இது போன்ற மனநிலையை மாற்ற நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும்’ என்றார்.

பின்னர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ’சினிமாவில் டான் உதயநிதி தான். டானிற்கு நிறைய விளக்கம் உள்ளது. கேஜிஎஃப் படத்தின் பாணியில் சொல்லணும் என்றால் ”Power full people make power full films” என்று சொல்லலாம். அருண் ராஜாவை நண்பன் என்று சொல்வதில் எனக்குப்பெருமையாக உள்ளது.

எனக்கும் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதனால், எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என இந்த மேடையில் நான் கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் இழப்பு அருண் ராஜாவுக்கு மிகப்பெரிய இழப்பு தான். ஆனால், சிந்து உன்னுடன் இருப்பார்’ இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசும் போது மேடையிலேயே அருண்ராஜா காமராஜ் கண் கலங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ’படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியை அப்பா கொடுக்கிறார். திராவிட மாடல் படத்தை மகன் கொடுக்கிறார். அவர் அப்பாவுக்கு கட்டுப்பட்ட பிள்ளை. தாத்தாவின் சுயவரலாற்று புத்தகமான ’நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பை உரிய முறையில் பெற்று, படத்திற்கு வைத்துள்ளார்.

தாத்தா வைத்த பெயரை மட்டும் வாங்கினால் போதாது. தாத்தா மாதிரி பெயரையும் அவர் எடுப்பார். தாத்தா வகித்த டைட்டிலையும் எதிர் காலத்தில் அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’எனப் பேசினார்.

அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘முதல் நன்றி என் தாத்தா கலைஞர் அவர்களுக்கு. ஆர்டிக்கள் 15 படத்தை பார்த்து இப்படத்தை ரீமேக் செய்ய விரும்பினேன். நிறைய இயக்குநர்களை பார்த்து இந்த படத்தை ரீமேக் செய்ய கேட்டேன். பலர் பயந்துவிட்டனர். பின்னர் அருண் ராஜா இயக்கிய கனா படத்தை பார்த்து தான் இந்தப் படத்தை இயக்க அவரைக்கேட்டேன்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இதை தமிழ்நாட்டிற்கு ஏற்ப மாற்றங்கள் செய்தோம். ஆனால், நாம் உத்தரப்பிரதேசத்தைவிட 30 ஆண்டுகள் முன்னால் உள்ளோம். அதற்கு அண்ணா, கலைஞர் தான் காரணம். இந்த தலைப்புக்காக எனது அப்பாவிடம் கேட்டேன். படத்திற்கு தலைப்பு நெஞ்சுக்கு நீதியா என்ன படம் என்று கேட்டார்.

சரி பார்த்து பண்ணுங்க. தப்பா எதுவும் பண்ணக்கூடாது என்றார். அந்த பயத்துடன் தான் படத்தை எடுத்தோம். இந்த படத்திற்கும் அன்பில் மகேஷுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமாவில் சோர்வாக இருந்தாலும், அரசியலில் சோர்வாக இருந்தாலும் மகேஷ்கிட்ட பேசினால் பார்த்தாலே போதும். எனக்கு சார்ஜ் போட்ட மாதிரி இருக்கும்’ என்றார்.

பின்னர் இறுதியாகப் பேசிய அருண்ராஜா காமராஜ், ’இந்தப் படம் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் என் மனைவி சிந்து தான். உணர்ச்சிகரமாக பேசவில்லை. அனைவருக்கும் நன்றி’ எனக்கூறினார்.

இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் 'O2'..!

Last Updated : May 10, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.