ETV Bharat / entertainment

PS2 செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து கண் கலங்கிய நடிகர்கள்! - Manirathnam

பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோதே கண் கலங்கினர்.

PS2 செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து கண் கலங்கிய நடிகர்கள்

author img

By

Published : Apr 27, 2023, 6:01 PM IST

பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோதே கண் கலங்கினர்

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ளது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா மற்றும் லைகா புரோடெக்சன் சார்பில் தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் பார்த்திபன், “ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக பொன்னியின் செல்வன் 2 இருக்கும். நான் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பேசியது அதிகம் வைரல் ஆகியது என்றனர். ஆனால், தற்போது வைரல் என்றால் வருமான வரி சோதனை தான். உங்களுக்கு முழுமையாக ஏதாவது ஆயிரம் கோடி ரூபாய் வரி சோதனைக்குப் போக வேண்டும் என்றால், பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடும் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள்” என்றார்.

இதனையடுத்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, தான் பேசிக் கொண்டிருந்தபோதே கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, “நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் யானை மேல் ஏறும் காட்சிகளை எடுக்கும்போது, ஒரு பெண்ணாக இருந்து அவ்வளவு தைரியமாக அந்த யானை மேல் பயப்படாமல் பேசும்போது கூட அந்த கதாபாத்திரமாகவே இருந்தார்.

இப்போது புதிதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரஸ் பரவி வருகிறதாம். TV என்று த்ரிஷா வைரஸ். அந்த நோயால் பல இளைஞர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நானும், கார்த்தியும் செய்த அலப்பறைகள் ஏராளம். அவரை என் நண்பன் என்று சொல்வதா, சகோதரர் என்று சொல்வதா என்று தெரியவில்லை.

மணிரத்னத்தைப் பற்றி பேசினால் 2 வருடங்கள் கூட பேசலாம். ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை எடுத்துக்காட்ட வேண்டும் என்று முடிவுடன் இருந்தார் (மணிரத்னம்)” எனக் கூறினார்.

இதனையடுத்துப் பேசிய கார்த்தி, “இன்று கல்லூரியின் ஃபேர்வெல் தினம் மாதிரி இருக்கிறது. நான் மணிரத்னத்துடன் வேலை செய்யும்போது ஒரு Xcel ஷீட்டாக பார்த்த கதை, இன்று நிஜமாக உள்ளது.

ஒரு நடிகர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது, எங்களுக்குள் எந்தவித பொறாமையும் இல்லாமல் இருந்தது. எல்லா மாநிலத்தவர்களும், அவர்களுக்கு ஒரு படம் வைத்து இருக்கிறார்கள். நமக்கு பொன்னியின் செல்வன் எனப் பெருமையாக இருக்கிறது. மணிரத்னத்தின் கனவுப் படம் இது. ஆனால், அதைக் கேட்டால் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஆனால், அதுதான் உண்மை. எப்போதும் டென்ஷனாக வேலை செய்பவர், இந்தப் படத்தில் ரொம்பவே மகிழ்ச்சியாக வேலை செய்தார்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய த்ரிஷா, “நடிகைகள் ஐஸ்வர்யா மற்றும் சோபிதா இருவருமே கவிதைகள். படத்தில் இருக்கும் மூன்று ஆண்கள் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இருந்ததால், ஒரு பெண்ணாக நாங்கள் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லாமல் உணரவில்லை” என்றார்.

தொடர்ந்து விக்ரம், “திருச்சியில் நடந்த பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி கலந்து கொள்ளவில்லை. அந்த இடத்தில் மேடை காலியாக இருந்ததில் வருத்தம் இருந்தது. புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, ஐஸ்வர்யா லட்சுமி யாரையும் தூங்கவிடாமல் பேசிக்கொண்டே இருப்பார்.

நந்தினி பற்றி பேச வேண்டும் என்றால், நாங்கள் அடுத்த படத்திலாவது சேருவோமா என்று பார்ப்போம். நான் அவ்வளவு சீக்கிரம் யாரையும் சகோதரர் என்று சொல்லமாட்டேன். நண்பர்கள் என்றே யோசித்துதான் சொல்வேன். ஆனால், ஜெயம் ரவி, என் சகோதரரைப் போன்றவர். 3 நாயகர்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் இருந்தோம்.

கார்த்தியைப் பார்க்கும்போது எனக்கு நிச்சயம் பொறாமையாக இருக்கும். காரணம், அவர் எளிதில் மக்களை கவர்கின்றார். அவரது தமிழ் உச்சரிப்பு, பேசும் அழகு எனக்கு பொறாமையை வரவழைத்தது” எனப் பேசும்போது கண் கலங்கினார். இதனைப் பார்த்து ஜெயம் ரவியும் கண் கலங்கினார்.

இதையும் படிங்க: Samantha: நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.