ETV Bharat / entertainment

வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்; 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

author img

By

Published : Jul 28, 2022, 8:37 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என ஓர் நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ’பொன்னி நதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ’வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்’ எனும் தலைப்புடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Let's begin our musical journey into the world of Cholas!#PS1FirstSingle coming your way on 31st July at 6pm! #ManiRatnam #ARRahman#PS1 #PonniyinSelvan @madrastalkies_ @arrahman @tipsofficial @TipsRegional @ilangokrishnan pic.twitter.com/lGGImhWXJ3

— Lyca Productions (@LycaProductions) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 'பாரதியார் கெட்டப்பில் தனுஷ்..!' : 'வாத்தி' டீஸர் வெளியீடு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என ஓர் நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ’பொன்னி நதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ’வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்’ எனும் தலைப்புடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பாரதியார் கெட்டப்பில் தனுஷ்..!' : 'வாத்தி' டீஸர் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.