ETV Bharat / entertainment

'சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!' - 'பொன்னி நதி' முதல் பாடல் வெளியீடு! - a r rahman

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

”சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!” - ’பொன்னி நதி’ பாடல் வெளியீடு

author img

By

Published : Jul 31, 2022, 7:47 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், ஜெயராம் எனப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

தமிழ்த்திரையுலகில் பல நாட்களாக எடுக்கமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுக்கிடந்த 'கல்கி' எழுதிய நாவலான ‘பொன்னியின் செல்வனை’ திரைப்படமாக, தற்போது இயக்குநர் மணிரத்னம் வெற்றிகரமாக எடுத்துமுடித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றுவருகிறது.

இந்நிலையில், தற்போது அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'பொன்னி நதி' எனும் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ட்ரம்ஸ் சிவமணியின் ட்ரம்ஸ் இசையில், இளங்கோ கிருஷ்ணனின் வரிகளில் அற்புதமான பாடலாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.

'பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும், சோழத்துப் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்..!' எனப் பாடலின் ஆரம்ப வரிகளே அற்புதமாய்த் தொடங்க, ரஹ்மானோ தனது காந்தக்குரலில் பாடல் கேட்போரை முழுவதுமாக கட்டிப்போடுகிறார் எனச்சொன்னால் அது மிகையாகாது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: ராஜமௌலியைப் பாராட்டிய ரூஸ்ஸோ சகோதரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.