ETV Bharat / entertainment

சிறிய படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்ப்பதில்லை - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வேதனை - theatres

கரோனாவுக்குப் பிறகு திரையரங்குகளுக்குச் சென்று பெரிய படங்களை மட்டுமே பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சிறிய படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்ப்பதில்லை

author img

By

Published : May 25, 2022, 4:21 PM IST

சென்னை: 21 வயதாகும் சஞ்சய் நாராயணன் என்ற இளைஞன் இயக்கியுள்ள 'மாலை நேர மல்லிப் பூ' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், 'இந்த சிறு வயதில், இது போன்ற ஒரு கதையை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது சிறப்பான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, இதன் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, 'கரோனா காலகட்டத்திற்குப் பிறகு, பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மனநிலையோடு இருக்கின்றனர். எனவே, இந்த திரைப்படத்தை பெரிய நிறுவனங்கள் மூலம் வெளியிட வேண்டும் அல்லது ஓ.டி.டியில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்' என யோசனை கூறினார்.

சிறிய படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்ப்பதில்லை
சிறிய படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்ப்பதில்லை

’சிறிய திரைப்படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்றும்; அந்த திரைப்படங்கள் சிறந்த முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 2022 தீபாவளி வெளியீடாக வெளியாகும் கார்த்தியின் 'சர்தார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.