நடிகர்கள் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படம் கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், வெகு நாட்களாக எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருந்த இந்தத் திரைப்படம் வருகிற டிச.14 அன்று வெளியாக உள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்து வெளியாகாமல் இருந்த ’பத்து தல’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு 'லிகர்' படக்குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்து