நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று (மே 15) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ' கமல் போன்ற மிகச்சிறந்த கலைஞர் இளம் இயக்குநருடன் பணியாற்றுவது முக்கியமானது. லோகேஷ் நிறைய பேட்டிகளில் கமலின் ரசிகன் எனக் கூறியுள்ளார்.
ஆகையால், ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இப்படத்தை எடுத்திருப்பார். மக்களிடம் நெருங்கும் ஒரு இசையை அனிருத் தொடர்ந்து கொடுத்து வருவது பொறாமையாக உள்ளது. தமிழ் சினிமா எல்லா சினிமாவுக்கும் முன்னுதாரணமாக இருக்கும். விக்ரம் அதனை செய்து காட்டும். கமலுடன் இணைந்து சீக்கிரம் பணியாற்ற போறேன்.
கமலை வைத்து மதுரை படம் செய்ய ஆசை. கமல் ஒரு ஜீனியஸ். பழைய விக்ரம் அந்த நேரத்தில் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்த படம். விருமாண்டியின் திரைமொழி பிடிக்கும். அவரை வைத்து சம்பவம் செய்ய ஆசை. வேட்டி சட்டை அல்ல. மதுரையில் கோட் சூட்கூட போட்டு இருக்கலாம். சிம்பு எனது படத்தைப் பார்த்து பேசியதைவிட அரசியல் பேசியது அதிகம். லோகேஷுக்கு வாழ்த்துக்கள்.. நீங்க ஜெயிச்சாதான் நிறையபேர் வரமுடியும்' எனப் பேசினார்.
இதையும் படிங்க: ''குத்துறங் கொம்மா' என்றால் இதான் பா...!'': விளக்கமளித்த கமல்!