ETV Bharat / entertainment

சந்தோஷ் நாராயணன் இன்றி வெளியான பா.ரஞ்சித்தின் முதல் பாடல்! - தெருக்குரல் அறிவு

முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இன்றி வேறு இசையமைப்பாளர் கூட்டணியில் உருவாகியுள்ள பா.ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இன்றி வெளியான பா.ரஞ்சித்தின் முதல் பாடல்!

author img

By

Published : Aug 9, 2022, 1:13 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்தின் முதல் பாடலான ’ரங்கராட்டிணம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ’எஞ்சாயி என்ஜாமி’ குறித்த சர்ச்சைகள் முடிவு பெறாத நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் ஆரம்பம் முதலே பாடகர் அறிவிற்காக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் ’அட்டகத்தி’ தொடங்கி ’சார்பட்டா பரம்பரை’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் பயணித்த பா. ரஞ்சித் முதல் முறையாக ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் அந்த கூட்டணியை மாற்றியுள்ளார்.

’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் டெண்மா இசையில், பாடகர் அறிவு வரிகளில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம் கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்கருவில் வெவ்வேறு காதல் கதைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ‘LGBTQ' சமூகத்தினரைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'பா.ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்' - பௌத்த அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.