சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று (ஜூன் 3) தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நேற்று (ஜூன் 2) தான் இயக்கிய 'கைதி' திரைப்படத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்துவிட்டு, 'விக்ரம்' திரைப்படத்தை பார்க்க வாருங்கள் என்று லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியது .
முன்னதாக இந்தப் படத்தில் வரும் "பத்தல பத்தல" பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ’ஒன்றியத்தின் தப்பாலே’ உள்ளிட்ட வரிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. மேலும் பாடலிலிருந்து இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று வெளியான விக்ரம் திரைப்படத்தில் ’ஒன்றியத்தின் தப்பாலே’ என்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு பாடலின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஞான தேசிகன் டூ இளையராஜா: ரகசியம் உடைத்த இசைஞானி