ETV Bharat / entertainment

தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! - dhusara vijayan

Nilavukku Enmel Ennadi Kobam: தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 3வது திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Nilavuku Enmel Ennadi Gobam
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மோஷன் போஸ்டர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 9:05 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனத் தனது பயணத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்திலிருந்து சமீபத்தில் "கில்லர் கில்லர்" என்ற பாடலும், நேற்று(டிச.24) "உன் ஒளியிலே" என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, இயக்குநராகவும் களம் இறங்கி உள்ளார். முன்னதான, தனது இயக்கத்தில் முதல்முறையாக இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் தலைப்பிற்கு கீழ் வழக்கமான காதல் கதை என்ற டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள்‌ விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இசையமைப்பாளர் தனது X பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில், “தனுஷ் இயக்கத்தில் முதல்முறையாக இசை அமைப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநரின் 'தி பாய்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.