இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்(RRR) மாபெரும் ‘பான் இந்திய’ திரைப்படமா உருவான இந்தத் திரைப்படம் உலகெங்கும் வசூலிலும் பெரிய சாதனைகளை புரிந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பாக இந்த ’ஆர் ஆர் ஆர்’ படத்தைப் பரிந்துரைக்க அனுப்பப்பட்டும், இந்தியத் தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படாததால் தானே 14 பிரிவுகளில் ஆஸ்கர் நாமினேஷனுக்கு விண்ணப்பித்தது. தற்போது அதன் விளைவாக ஆஸ்கரின் நாமினேஷனுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் உலகப் புகழ்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காகத் தேர்வாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் பாடல் ஆஸ்கர் விருது பெறுமென பெரும்பாலான சினிமா ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பாடல் ஆஸ்கர் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யாரும் எதிர்பாராத விதமாக மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தொழில்நுட்பத்தில் மிகவும் வலிமையான திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ‘ அந்தப் பிரிவில் ஏதேனும் ஒரு விருதுக்குத் தேர்வாவது ஆகிவிடுமென்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது ’ஆர் ஆர் ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளது. சமீபத்தில் இந்தத் திரைப்படம் திரைத்துறையில் உயரிய விருதுகளான ‘New York Film critic circle' விருதையும் ‘Golden globe' விருதையும் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ சோபிதா துலிபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ்