ETV Bharat / entertainment

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

இயக்குநர் ரவி இயக்கத்தில்  “மூத்தகுடி” திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”!

author img

By

Published : Jul 6, 2022, 8:58 PM IST

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரித்து வருகின்றனர்.

“மூத்தகுடி” படத்தை இயக்குநர் ரவி பார்கவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக அறிமுக நடிகை அன்விஷா நடிக்கிறார்.

மூத்தகுடி
மூத்தகுடி

இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயா நடிக்கிறார். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆகையால், 1970-களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். எனவே 1970 மற்றும் 1980களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மஞ்சு வாரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.