நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னடத்தின் 'பான் இந்தியா' திரைப்படமான ’கே.ஜி.எஃப் - 2’ நேற்று(ஏப்.14) உலகமெங்கும் வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கு உலகமெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியாகிய முதல் நாளிலேயே இந்தத் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.135 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் எடிட்டர் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்தத் திரைப்படத்தின் எடிட்டர் வெறும் 20 வயதே நிரம்பிய ஒரு இளைஞர். இவரின் பெயர், ’உஜ்வால் குல்கர்னி’, கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானதும் அதனின் ஒரு பாடலை தன்னுடைய பாணியில் எடிட் செய்து யூ-ட்யூப்பில் அப்லோடு செய்திருக்கிறார்.
அதனைக் கண்டு ஈர்க்கப்பட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், இவரிடம் கேஜிஎஃப்-2-வின் ட்ரெய்லரை எடிட் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார். அதனையும் பிரமாதமாக செய்துமுடிக்கவே முழுப் பட வேலையையும் இவரிடமே ஒப்படைத்தார், பிரசாந்த் நீல்.
இதன் மூலம் ’ஃபேன் மேடு’ எடிட்டராக இருந்த குல்கர்னி தற்போது மாபெரும் பான் இந்தியா திரைப்படத்தின் எடிட்டராக மாறியுள்ளார். கலைக்கும், திறனிற்கும் வயது வெறும் வெற்றெண்ணே..!
இதையும் படிங்க: ரன்பீர்-அலியா திருமணம்... ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...