ETV Bharat / entertainment

நடிகர் விஷாலுக்கு "மார்க் ஆண்டனி" படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி - என்ன தெரியுமா? - அம்மா பாடல் வெளியீடு

Actor vishal Mark Antony movie song: நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக் குழுவினர் "அம்மா எனும் மந்திரமே" என்ற பாடலை வெளியிட்டு உள்ளனர்.

விஷாலுக்கு 'மார்க் ஆண்டனி' படக்குழு கொடுத்த பரிசு - அம்மா பாடல் வெளியீடு !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 7:25 AM IST

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் 'திரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அந்த படம் அடல்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடித்த "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தை இயக்கினார்.

இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் "மார்க் ஆண்டனி". இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா என ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்தவர்களின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், முன்னதாக விஷால் மற்றும் படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்து இந்த படத்திற்கான டீசரை காட்டி ஆசி பெற்றனர்.

இதையும் படிங்க: “நான் கஷ்டத்தை கேட்டு படம் பண்றவன்” - நடிகர் யோகி பாபு!

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து அடுத்த மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, மார்க் ஆண்டனி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாடலான "அம்மா என்னும் மந்திரமே" என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலை மதுரகவி எழுதியுள்ளார். சைந்தவி பாடியுள்ளார். அம்மாக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யும் விதமாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடல் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்க்கையில் எல்லா தருணங்களுக்கும் பாடல்கள் நம்மிடம் உள்ளன. நம்மிடம் அனைவருக்கும் அர்ப்பணிப்பு உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மிக முக்கியமான அர்ப்பணிப்பு என்னவென்றால், அவர்கள் குடும்பத்தின் உள்ளவர் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதிசெய்கிறார்கள்.

  • Well we have songs for all moments in life. We have dedications for everyone. The most important dedication is to all the Mothers in this Universe who are the forefront runners of the family and make sure that their kids grow up to have a great future. So, we have one such…

    — Vishal (@VishalKOfficial) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதன்மையாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர். எனவே, மார்க் ஆண்டனி படத்தில் எங்கள் பாடலின் மூலம் அனைத்து தாய்மார்களுக்கும் இது ஒரு அர்ப்பணிப்பு. மேலும் இந்தப் பாடல் எனது படத்தில் இடம் பெற்றதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார். முன்னதாக இப்படத்தின் "அதிருதா", "ஐ லவ் யூ டி" பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தன.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.