ETV Bharat / entertainment

மராத்தி சினிமாவின் முதல் பான் இந்தியா திரைப்படம் “ஹர் ஹர் மகாதேவ்”!!

மராத்தி மொழிப்படமான “ஹர் ஹர் மகாதேவ்” முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஹர் ஹர் மகாதேவ்
ஹர் ஹர் மகாதேவ்
author img

By

Published : Oct 6, 2022, 6:37 AM IST

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சுயராஜ்யத்தை கனவு கண்டார். இந்த கனவை நிறைவேற்ற, பல துணிச்சலான வீரர்கள் அவருடன் இணைந்தனர்.

அதில் மிக முக்கியமான, மிகச் சிறந்த மராட்டிய வீரர்களில் ஒருவர் பாஜி பிரபு தேஷ்பாண்டே Zee Studios வழங்கும் 'ஹர் ஹர் மகாதேவ்' திரைப்படத்தில் கோட்கிண்டியில் பாஜி பிரபுவின் வீரக் கதையை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கவுள்ளனர்.

இயக்குநர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். Zee Studios வழங்கும் இப்படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளிக்கு மராத்தி மொழியுடன் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

சத்ரபதி சிவராயரின் பேரரசு தென்னிந்தியா வரை பரவியிருந்தது. இன்றும் மகாராஜின் வீரம் பற்றிய கதைகள் நினைவுகூரப்பட்டு, நாட்டின் தென்னிந்திய பகுதிகளில் மக்களால் கொண்டாடப்படுகின்றன.

கடந்த சில வருடங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய சினிமாவின் முகத்தையே மாற்றிவிட்டன. 'பாகுபலி', 'கேஜிஎஃப்', 'புஷ்பா', 'ஆர்ஆர்ஆர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' போன்ற படங்கள் அவற்றின் பிரம்மாண்டத்தால் திரையில் மேஜிக்கை நிகழ்த்தியுள்ளன.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இப்படங்களை ஒரே மாதிரியாக கொண்டாடினர். 'ஹர் ஹர் மகாதேவ்' திரைப்படம் தெய்வீக அந்தஸ்துடன் மிகப்பெரும் பிரமாண்டத்தை திரையில் வடிக்கும் ஒரு அட்டகாசமான படமாக இருக்கும். மராத்தி பேசும் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பன்மொழி பார்வையாளர்களையும் ஈர்க்கும் ஒரு திரைப்படமாக இருக்கும்.

ஒரு மகத்தான காவியத்தை உருவாக்க, 'ஹர் ஹர் மகாதேவ்' படத்திற்காக, தென்னிந்திய இசைத் துறையில் இருந்து இரண்டு நன்கு அறியப்பட்ட பிரபலங்கள் முதல் முறையாக மராத்தி இசையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். முதல் பெயர் சித் ஸ்ரீராம், இந்தப் படத்தில் வரும் புதிரான 'வா ரே வா ஷிவா' பாடலைப் பாடியுள்ளார்.

மேலும் 'ஹர் ஹர் மகாதேவ்' படத்தின் தலைப்புப் பாடலுக்கு ஷங்கர் மகாதேவன் குரல் கொடுத்துள்ளார் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தாள வாத்தியக் கலைஞர் சிவமணியின் தாள வாத்தியங்களால் இத்திரைப்பட இசை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஹர் ஹர் மகாதேவ்
ஹர் ஹர் மகாதேவ்

இசை வெளியீட்டு விழாவில், சிவமணி தனது மேளதாள மேஜிக் மூலம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார். 'ஹர் ஹர் மகாதேவ்' படத்தின் பாடல்களின் மேஜிக்கை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அனுபவிக்கலாம்.

நம் வரலாற்றில் நடந்த ஒரு உண்மையான போரைப் பற்றியதே இந்தப் படம். இத்திரைப்படம் இந்தியா முழுவதும் அக்டோபர் 25ஆம் தேதி Zee Studios நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது.

இத்தையும் படிங்க: விரைவில் வருகிறதா ராட்சசன் 2?; அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.