ETV Bharat / entertainment

'அய்யப்பனும் கோஷியும்' பட நடிகர் வினோத் தாமஸ் மர்மமான முறையில் மரணம்! - ஈடிவி பாரத் செய்திகள்

Actor Vinod Thomas death: கேரளாவின் பம்படி பகுதியில் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர் வினோத் தாமஸின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malayalam actor Vinod Thomas found death
மலையாள நடிகர் வினோத் தாமஸ் மரணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 12:24 PM IST

கோட்டயம்: மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர், நடிகர் வினோத் தாமஸ் (47). பிரபல மலையாள படம் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், நேற்று (நவ.18) இரவு கேரள பம்படி பகுதியில் காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மாவட்டம், பம்படி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், காரின் அருகில் சென்று பார்த்த ஓட்டல் பணியாளர்கள், காருக்குள் ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், காருக்குள் இருந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் மலையாள நடிகர் வினோத் தாமஸ் என தெரிய வந்துள்ளது. இவர் 'அய்யப்பனும் கோஷி' மற்றும் 'நாதொலி ஒரு சிறிய மீனல்ல' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் தாமஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும், வினோத் தாமஸின் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினோத் தாமஸின் மரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வினோத் தாமஸின் மரணச் செய்தி மலையாள திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: போய் பொழப்ப பாருங்க.. த்ரிஷாட்ட தப்பான வீடியோவை காமிச்சிருக்காங்க - த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.