ETV Bharat / entertainment

பயமாவது.., பயங்கரமாவது..!: திமுகவை வம்பிழுத்த மய்யத்தாரின் போஸ்டர்! - விக்ரம் திரைப்படம்

கோவையில் திமுக போஸ்டரில் இருந்த வாசகத்திற்கு எதிர் வாசக தொணியில் மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

பயமாவது.., பயங்கரமாவது..!: திமுகவை வம்பிழுத்த மய்யத்தாரின் போஸ்டர்..!

author img

By

Published : May 19, 2022, 9:34 PM IST

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வரும், “என்ன பயமா இருக்கா? இன்னும் பயங்கரமா இருக்கும்..!” என்ற டயலாக் பிரபலமான நிலையில் அதனை பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதில் கோவையில் திமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டரில் "பீஸ்ட்" திரைப்படத்தில் வரும் டயலாக் ஆன ”பயமா இருக்கா? 2024 இன்னும் பயங்கரமா இருக்கும்..!” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது கோவை முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ’விக்ரம்’ திரைப்படத்திற்காக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், “பயமாவது.. பயங்கரமாவது, எதுவானாலும் பார்த்துக்கலாம்..!” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.