கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த படம் 'மகான்'. இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிப்ரவரி 10ஆம் தேதி 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியானது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனைவரது நடிப்பும் பாராட்டைப் பெற்றது. எந்தவித கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் ஏற்று நடிக்கும் விக்ரம், இந்தப் படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினார். அதேபோல துருவ் விக்ரமும் தனது தந்தைக்கு ஈடாக நடித்து கலக்கியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டினர். இந்நிலையில் இன்று (மே 21) இப்படம் ‘அமேசான் பிரைமில்’ வெளியாகி 100 நாள்களை கடந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ சரியாக வரவில்லையா..? : அதிருப்தியில் மணிரத்னம்?!