இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன் தற்போது மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார், நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.
கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது.இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் அப்டேட் - மிடுக்கான தோற்றத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்!