சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' திரைப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது தானே இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, பாரத், ஆஜித், கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப்பெற்றுள்ளது. முதல்நாள் தொடங்கி இன்று வரை அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் முதல்நாள் வசூல் ரூ.3 கோடியைத் தாண்டியுள்ளது.
இதனால் தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய வசூல் படைத்து சாதித்து உள்ளார், பிரதீப் ரங்கநாதன். இப்படத்தைத் தனக்காகவே எழுதி இயக்கிய பிரதீப் ரங்கநாதன், இப்போது இப்படத்தின் வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளார்.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு அமோக வரவேற்பு