ETV Bharat / entertainment

’'கைதி'-யை ஒருமுறை பார்த்துவிட்டு ’விக்ரம்’ பார்க்க வாருங்கள்..!’ - லோகேஷ் கனகராஜ்

author img

By

Published : Jun 2, 2022, 10:51 PM IST

கைதியை ஒருமுறை பார்த்து விட்டு 'விக்ரம்' படத்தை பார்க்க வாருங்கள் என லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’’கைதி’-யை ஒருமுறை பார்த்துவிட்டு ’விக்ரம்’ பார்க்க வாருங்கள்..!’ - லோகேஷ் கனகராஜ்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகவுள்ளது.

ஏற்கெனவே இப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதை மேலும் அதிகப்படுத்தும் வண்ணம் “ கைதி திரைப்படத்தை பார்த்து விட்டு ‘விக்ரம்’ திரைப்படத்தைக் காண வாருங்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன முதலே இந்தப் படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் எடுத்த ’கைதி’ படத்திற்கும் ஏதோ ஒரு தொடர்புள்ளது என ரசிகர்கள் பேசிவந்த நிலையில், தற்போது அதை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாய்ப்பைத் தனக்குத் தந்த கமல்ஹாசனுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'உதயநிதி தம்பிக்கு நன்றி..!' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.